Tuesday, March 04, 2014

உலக சினிமா ரசிப்பவன் வெகுஜன விரோதியா?

செல்வராகவனின் இரண்டாம் உலகம் பார்த்தேன். நிஜமாகவே ரசித்தேன். இதை சொன்னதற்கு ஆபீசில் கூடி கூடி சிரித்தார்கள். 

சிலர் மனதில் Franz Kafka/நாஞ்சில் நாடன் படிபவர்கள் ஏதோ வெகுஜன விரோதிகள் போல தோன்றுவதுண்டு..

ஒரு "metamorphosis" படிக்கும் முன் பத்து "Sidney Sheldon" தலையை வருத்திக்கொள்ளாமல்  படித்துவிடலாம் தான்.  "Sidney Sheldon" 10 கதையும் நல்ல டைம் பாஸ் தான், ஆனாலும் நம் மனதில் தங்கும் ஒரு விஷயம் வார்த்தை ஜாலங்களோ, action/suspense sequence களோ அல்ல, மாறாக  "metamorphosis" போல ஒரு நாவலில் அது நம் மனதில் விதைக்கும் எண்ணங்களே நம்மை நமக்கே அடையாளம் காட்டும் கண்ணாடியாக இருக்க கூடும். "Ayan Rand இன் The Fountain headம் ", Margaret Mitchell இன் Gone with the Windம் " என் வாழ்கையில் மிக முக்கியமான மாற்றங்களை, வாழ்வின் போக்கை மாற்றிய, மற்றவர்களை குறிப்பாக பெண்களை பார்க்கும் கண்ணோட்ட தையே மாற்றியது. இப்புத்தகத்தை படிக்காவிட்டால் நான் நாசமாகி போயிருப்பேன் என்று கூறவில்லை ஆனாலும் என் இயல்பு கண்டிப்பாக மாற்றம் கண்டுள்ளது. 

எனக்கும் ஒரு ஞாயிறு evening Singam2 பார்க்கவே விருப்பம், ஆனால் அபூர்வமாக வீட்டில் யாரும் இல்லா ஒரு மௌனமான மதியத்தில் DVD இல்  "A street car named Desire" பார்க்கும் அனுபவம், கண்டிப்பாக பொழுது போக்கு அல்ல, வாழ்வியலின் பக்கங்களை புரட்டி பார்க்கும் ஒரு தருணம். 

(Ps : எத்தனையோ படங்களும்/கதைகளும் இருக்க குறிப்பாக  The Fountain headGone with the Wind, A street car named Desire கூற காரணம் என்னுள் பிரதானமாக ஏற்பட பெண்களை பார்க்கும் கண்ணோட்ட தையே மாற்றிய புத்தகம்/படம் இவை யாகும். )

மகன் முன் சைக்கில் திருடி மாட்டிக்கொள்ளும் தந்தையின் உணர்வுகள், 
தங்கைக்காக ஓட்டபந்தயத்தில் 2ம் இடம் பிடிக்க ஓடும் அண்ணனின் உணர்வுகள், 
தனது ஏழ்மையான பால்யத்தின் skateboardஐ மரணிக்கும் பொழுது நினைத்துகொள்ளும் கோடீஸ்வரரின் உணர்வுகள், என்னுள் ஏற்படுத்திய மாற்றங்கள் எத்தனையோ. தவறு செய்ய வாய்ப்பு கிடைக்காதவன் நல்லவன் அல்ல, அது போல தருணங்களில் நாம் எடுக்கும் முடிவுகள் தான் நாம் நல்லவனா என்பதை நமக்கே உணர்த்தும் பொழுதுகள். ஒரு சிறு கணநேர முடிவுகள் நம் வாழ்வையே மாற்றிபோட வல்லமை படைத்தவை.. என் வாழ்வின் பல தருணங்களை நான் படித்த புத்தகங்களும் பார்த்த படங்களுமே தீர்மானித்துள்ளன. 

உதாரணமாக: குணா / தளபதி இரண்டு படங்களும் ஒரே நாளில் ஒரு தீபாவளிக்கு ரிலிஸ் ஆனது. சண்டை போட்டு  தளபதி படம் பார்த்தேன், ரொம்ப சந்தோசமாக உலகை வென்ற மிதப்பில் அடுத்தநாள் ஸ்கூல் சென்றேன். ரொம்ப காலம் கழித்து குணா பார்த்தேன், ஒரு டயலாக், "எலோரும் என்ன பைத்தியம்னு சொல்றாங்க" " யார் சொன்னா, வெளில இருக்கிறவங்க தான் பைத்தியம், ஒருவன் பெண் பைத்தியம், ஒருவன் பண  பைத்தியம்.." இந்த ஒரு டயலாக் என்னுள் ஏற்படுத்திய தாக்கம் மிக மிக அதிகம். 

தளபதி பார்க்க வேண்டியது தான், ஆனால் குணா ? 

இதெல்லாம் படிப்பதால்/ ரசிப்பதால் நான் ஒரு அறிவு ஜீவி என்று மார்தட்டிக் கொள்ளவில்லை, எனக்கு வாய்ப்பு கிடைத்தது இவற்றை ரசிக்க அவ்வளவே. 

(PS: இன்று இரவு சிங்கம் 2 தான் போறோம், Ship of Theseus பார்க்க வேண்டும்,... ஒரு நாள் ...)