Showing posts with label எனது கவிதைகள். Show all posts
Showing posts with label எனது கவிதைகள். Show all posts

Friday, February 06, 2009

சிறு கவிதைகள்

" வெற்றுக்கால்லிடுக்கில்
குறுகுறுக்கும்
சுடுமணலின் அவஸ்தை, நீ..... "

"மழைதோறும் தேடிப்பார்கிறேன்
எனக்கான
உன் கண்ணீர்த்துளியை...."
" சில்லுசில்லாய்
என்னை சிதறடித்தாய்
கண்ணாடி மனதிலிருந்து கல்லெரிந்தது
எனது தவறு தான்...."

பூ இதழ் உதிர் காலம்...

This Poem was written on farewell day while waiting for the exams..

" இனி
பூ
இதழ் உதிர் காலம்
உதிர்ந்த இதழ்களை மீண்டும் கோக்க முடியாவிட்டலும்
சிறுவயதில்
ஒற்றை பூவிதழ்களை
புத்தக பககங்களிடையே பாடம் செய்தது போல
இவற்றையும் பாடம் செய்கின்றேன்
பின்னொரு நாளில்
வசந்த கால நினைவுகளை மிடுத்தரகக்கூடும் அது..
-விஜய்