Wednesday, February 11, 2009

நான் கடவுள் - விமர்சனம்

கதை :
இருவரியில் ஒரு கதை :
" ஆஹம் ப்ஹ்ரமாஸ்மி " அதாவது " நான் கடவுள " என நம்பும் ஒரு இளம் அஹ்கொரி ஆகிய (http://en.wikipedia.org/wiki/Aghori) கதை நாயகன் "வாழ கூடதவர்களுக்கு நீ தரும் மரணம், சாபம் ; வாழ முடியாதவர்களுக்கு நீ தரும் மரணம், வரம்", என்று குரு போதித்ததை போல ஒரு துஷ்டனையும், ஒரு கஷ்டஜீவியையும் கொன்று விடுகிறான்.
இந்த கதையில் வித்யாசமாக இருப்பது: கதைநாயகன் ஒரு துஷ்டனை மட்டும் கொல்லாமல், ஒரு கஷ்டஜீவியையும் கொல்வது மட்டும் தான்
திரைக்கதைp :
நான்கே பக்கங்களில் திரைக்கதை அமைத்து வசனங்களாலும் , வசனம் இல்லாத கட்சிகளாலும் படத்தை நிரப்பி இருக்கிறார்கள்

இந்த கதைக்கு திரைக்கதை அமைப்பது ஒன்றும் கோடம்பாக்கத்திற்கு புதிதல்ல, ஆனால் இயக்குனர் பாலா அல்லவோ . அதனால் கதை நாயகன் ஒரு அகோரியாக சித்தரிக்கப்படுகிறான். அகோரி தமிழ் பேசவேண்டி அதற்கு ஒரு ஆழமில்லாத முன்கதை . ஜோஸியத்தை நம்பி மகனை குடும்பத்தை விட்டு பதினான்கு வருடங்கள் பிரித்து வைக்க காசியில் கொண்டுவிடுகிறார் தந்தை . ஆரண்யகாண்டம் முடிந்தவுடன் மகனை தேடி காசிக்கு வருகிறார். பார்த்தமாத்திரத்தில் மகனை அடையாளம் கண்டுகொள்வதாக காட்டுவதும், அடம் பண்ணாமல் அவன் தகப்பனுடன் ஊருக்கு வந்து சேர்வதும் என காட்சிகளை நீடித்து நோகடிக்காமல் இருப்பதால் நேரடியாக கதைக்குள் செல்லத்தான் போகிறார் என்று காத்திருந்தால் படம் அங்கேயே உட்கார்ந்துவிடுகிறது அரை சயனத்தில், கதை நாயகனை போலவே.



நல்ல இயக்குனர் என அறியபடுவதால் "ஊருக்கு ந்ல்லது சொல்வேன் "என கிளம்பிவிடுகிறார் பாலா, மற்றும் கதை நாயகனுக்கும் வேலை வேண்டுமே. பிச்சை எடுப்பதை தொழிலாக பிழைக்கும் ஒரு துஷ்டனையும் அவனது "உருப்படிகளாக" அறியப்படும் உடல் இயலாதவர்களும் அவர்களது தினப்படி வாழ்வுமாக முழுப்படத்தையும் இழுத்துச்செல்கிறார். அவப்போது பாலா பாணி நய்யாண்டி நகைச்சுவை வேறு. ந்யன்தாராவின் குத்துபாட்டு கூட உண்டு, நேரத்தை நிரப்ப. உடல் இயலாதவர்களை தேடிப்பிடித்து வாங்கி வந்து பிச்சைஎடுக்க வைக்கும் நிஜவாழ்வின் நிதர்சனங்களை இலைமறைக்காயாக, "வில்லன் , slumdog millionaire" உட்பட பல படங்களில் பார்த்திருந்தாலும், இப்படம் சரேலென முகத்தில் அறைகிறது, மனதிலும். "குறை ஒன்றும் இல்லை" என கடவுளுக்கு நன்றி சொல்ல தோன்றுகிறது. பாலாவின் வெற்றி இது ஒன்றுதான். ஆனால் தொடர்ந்து விதவிதமான உருபடிகளயே காட்டிக்கொண்டிருப்பதாலும், அவர்களே சந்தோசமாகத்தான் இருக்கிறார்கள் பின்ன என்ன என பரிதாபம் மாறி எரிச்சலாக மாறிவிடுகிறது பாலவின்மேல். தமிழில் வந்ததில் மிகச்சிறந்த "black comedy" என தராளமாக சொல்லலாம் தான் எனினும் கதை போக்கின் மனஓட்டத்தை சிதைத்து விடுகிறது.

சும்மா கஞ்சா அடித்துவிட்டு 'தன்னிலை உணர்ந்து' படுதுகொண்டிருபவன் கதை நாயகன் ஆக வேண்டாமோ. அதற்காக ஒரு கதை நாயகி.அந்த துஷ்டனின் மகளான கல்லூரி மாணவி கதாநாயகி , கதாநாயகனை காதலித்து , அதனால் ஏற்படும் மோதல்களில் கதாநாயகன் துஷ்டனை விழ்த்தி நாயகியை கைபிடித்திருந்தால் அது இயக்குனர் ஹரி படமாகிஇருக்கும். இது பாலா படம். இப்படிதான் படம் நெடுக நமக்கு நினைவுபடுத்திக்கொண்டே இருக்கிறார், நான் பாலா என்று .

அதனால் கதாநாயகி ஒரு குருட்டு பிச்சைகாரி. அவளை அவள் "முதலாளி" ஒரு கோர முகமுடைய, யாரும் பார்க்கவே பயப்படும் , ஆனால் திருமணம் செய்துகொள்ள விரும்பும் ஒரு பணக்காரனுக்கு பத்து லட்ச்த்திற்கு விற்க முயல்கிறான் . மற்ற உருப்படிகளின் மேல் பரிதாபம் வரவழைக்க முயலும் பாலா இந்த கோரமாணவன் மேல் மட்டும் ஏன் வெறுப்பு வரும்படி செய்கிறார். அவன் பணக்காரன் என்பதாலா? நாசரின் "முகம்" திரைப்படம் ஏனோ ஞாபகம் வருகிறது. இந்த சூழலில், தப்பிபதற்காக கதை நாயகனிடம் தஞ்சம் புகுகிறாள் நாயகி. இவ்வளவு நேரமும் கஞ்சா அடித்துவிட்டு படுத்தே கிடக்கும் நாயகன் துஷ்டனை கொன்று, தின்று விடுகிறான். நல்லவேளை தின்பதை காண்பிக்கவில்லை. நன்றி பாலா, சிறிதளவேனும் பார்பவர்கள் மேலும் கரிசனம் காட்டியதால் . இது கதையின் முதல் வரியான "வாழகூடாதவர்களுக்கு மரணம் சாபம்" .

கொலையை விசாரிக்கும் போலீஸ் கூட அவனக்கு பயந்து அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என பின்வாங்குவதும் தான் யதார்த்தமா பாலா?
கதையின் இரண்டாவது வரியான "வாழஇயலதவர்களுக்கு மரணம் வரம்" என்பதற்கிணங்க துஷடர்களால் சீரழிக்கப்பட்ட நாயகிக்கு அவள் வேண்டுகோளுக்கினங்க மோட்சம் வழங்குகிறான் அகோரியாகிய நாயகன். "பருத்திவீரன்" போல.

அவளவுதான் படம்.

இந்த படத்தை விமர்சனம் செய்யும் போது இது நல்ல படமா , இல்லையா என்பதில் குழப்பமே வந்துவிடுகிறது படம் பார்த்துவிட்டு வெளியே வருபவர்கள் மனநிலை போல.

அகோரிகளின் வாழ்கைமுறையும், உடலியலாதவர்களின் வாழ்வியல் துன்பங்களையும் சந்தோஷங்களையும் கிட்டதட்ட யதார்த்தமாக பதிவு செய்த முதல் படம் என்பதை தவிர கதையிலோ திரைக்கதையிலோ எந்த புதுமையும் இல்லை.

கதைநாயகியையோ, நாயகனையோ கொல்வது , முரட்டு நாயகன், என வழக்கம் போலவும், நரமாமிசம் தின்னும் அகோரி, "வாழயலதவர்களுக்கு நீதரும் மரணம் வரம் " எனும் கதையின் oneline, விதவிதமான உடல் இயலாதவர்களை காட்டியது என்பதான தனக்கே உரிய புது பரிமான முயற்சிகளும் என்று "நான் பாலா " என காட்டி இருக்கிறார்.

மொத்தத்தில் மக்கள் பார்க்கவேண்டும் என்பதைவிட நான் பாலா என நிருபிபதையே செய்திருக்கிறார்.

ஆர்யா , பூஜா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள் என்பதைவிட வாழ்ந்து இருக்கிறார்கள் என்றுதான் சொல்லவேண்டும். தண்டவனாக வருபவருக்கு OSCAR குடுத்தாலும் தகும். பாலா படத்தின் நடிகர்களின் நடிப்பை குறை சொல்ல எந்த ஆஸ்கார் நாயகனாலும் முடியாது. பூஜாவின் குரல் தான் காதில் "கொய்ங்" என கேட்கிறது.

பின்னணி இசை சிறப்பு, வேறென்ன சொல்ல. ஆனால் பூஜா பாடும் பாடல்கள் அவர் குரலுக்கு துளியும் சம்பந்தம் இல்லாமல் இருக்கிறது. பாடல்களுக்கான வாதியங்களும் தேவைஇல்லாமல் ஒலிக்கிறது.


ஒளிப்பதிவு மிகச்சிறப்பு.


போலீஸ் நய்யாண்டி , நடிகைகளின் மேலான இளக்காரம், பணக்கார துவேஷம், கடவுள் மீதான ஆற்றாமை என வெகுஜன மன குருரங்களுக்கு தீனி போட்டு கை தட்டல் வாங்குகிறார் வசனகர்த்தா.
யதார்த்த வசனங்கள் தான் எனினும், censor இல் mute பண்ணியும், " புளுத்துனான் தேவிடியா பையன்" என கடவுளை திட்டும் வசனம்மும் , "தும்மைணா என்னனு தெரியுமா "என்று தாயிடமே கேட்பதும் எப்படி U/A certificate உடன் தப்பி வந்தது என தெரியவில்லை.

அடுத்த படத்திற்கான கருவை இதிலே கோடிட்டு காட்டிவிடுகிறார். "ஜெயம் ரவி -ஐ வைத்து திருநங்கைகளின் வாழ்வியலை படம் பிடித்தாலும் ஆச்சர்யபடுவதற்கில்லை.

செய்யங்கள் பாலா உங்களை விட்டால் அதைச்செய்ய ஒருவனுக்கும் தைரியம் இல்லை கோடம்பாக்கத்தில்.

கடைசியாக உலகத்தரம் வாய்ந்த நல்ல படம் என்றோ , நல்ல entertainer என்றோ கூறமுடியவிட்டாலும் யாரும் கண்டுகொள்ளாத ஒரு வாழ்வியலின் சமகால பதிவாக நிச்சயம் ஒரு உன்னத படைப்பை தந்து, "நான் பாலா" என நிருபித்து இருக்கிறார்.

"A TRULY DEPRESSING MOVIE. BUT A GREAT DOCUMENTARY."

6 comments:

உண்மைத்தமிழன் said...

"A TRULY DEPRESSING MOVIE. BUT A GREAT DOCUMENTARY."

நன்று விஜய்..

இதே போன்று பதிவின் முடிவில் உங்களது டிரேட் மார்க்காக ஒரு பன்ச் வைத்துவிடுங்கள். இது உங்களது ஸ்டைலாக இருக்கட்டும்.

பதிவில் நிறைய இடங்களில் தொடர்ச்சிக் குறி(,), நிறுத்தக்குறி(.)கள் இடப்படவில்லை. அதேபோல் சிற்சில இடங்களில் எழுத்துப் பிழைகள்.. சரி செய்து விடுங்கள்..

பதிவு பற்றி.. அவரவர் கருத்து அவரவர்க்கு விஜய்..

எழுதப்படுவதை மிக உறுதியாகச் சொல்வது மட்டுமே பதிவரின் கடமை..

இந்தக் கடைசி பன்ச் வரிகள் எனக்குப் பிடித்திருக்கிறது.. மொத்தத்தையும் அந்த இரண்டு வரிகளில் சொல்லியிருக்கிறீர்கள்..

நன்று..

வாழ்க வளமுடன்..

தொடர்ந்து எழுதுங்கள்..

Arasi Raj said...

"உள்ளேன் அய்யா ".....படம் பார்த்துட்டு வந்து பதிவு படிக்குறேன்....

படம் பார்க்க முன்னாடி , அடுத்தவங்களோட தாக்கம் இருந்துச்சுன்னா ரசிக்க முடியாது...

Arasi Raj said...

Sir, You are invited here :o)

http://sandaikozhi.blogspot.com/

Arasi Raj said...

ஆஸ்கர் பற்றி பதிவு போட்ருக்கேன்.....வந்து சந்தோஷத்தை பகிர்ந்துக்கோங்க

தேவன் மாயம் said...

படத்தின் நிலையை
அழகாக
சொல்லியிருக்கிறீர்கள்!!!
தேவா,,

sakthi said...

nandraga vimarsanam seythu erukindrergal thodrnthu eluthungal